அமைச்சர் அதாவுல்லாவினால் 06 உள்ளுராட்சி சபைகளுக்கு டபள் கெப் வாகனங்கள் வழங்கிவைப்பு

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளுராட்சி சபைகளுக்கு அதி நவீன கெப் வாகனம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்  மேலும் 06 உள்ளுராட்சி சபைகளுக்க டபள் கெப் வாகனம் வழங்கப்பட்டது.

 

இந்நி;கழ்வு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் மஹியங்கனை பிரதேச சபை தவிசாளர் டபிள்யு.எம். சுனில் அவர்களுக்கு அமைச்சர் அதாஉல்லா அவர்களினால் வாகனம் வழங்குவதை படத்தில் காணலாம்.

 

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் இன்திக பண்டாரநாயக்க, அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க, அமைச்சரின் இணைப்புச் செயலாளர், பொறியியலாளர் எம்.எஸ். நஸீர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களும் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

வாகனங்கள் வழங்கப்பட்ட சபைகள் வருமாறு :

1.    மஹியங்கன பிரதேச சபை
2.    புத்தளம் பிரதேச சபை
3.    உடுநுவர பிரதேச சபை
4.    எஹலியகொட பிரதேச சபை
5.    கந்தேகெட்ய பிரதேச சபை
6.    சேருவில பிரதேச சபை

 

11

 

12

 

13

 

14

Previous post எங்களுக்கு என்ன தண்டனை குன்ஹா?
Next post எரிசக்தி சேமிப்பு திட்டத்தினுடாக தொழிற்பேட்டைகள் 20% மின்வலு பயன்பாட்டை குறைக்க வேண்டும்’ – அமைச்சர் ரிஷாட்