அமைச்சர் விமலின் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடி இடமாற்றம் – அச்சத்தில் விமல்
புலனாய்வு செய்தியாளர்
பொறியியல் வீடமைப்பு பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்சவின் பிரபு பாதுகாப்பு பிரிவு (MSD) அகற்றப்பட்டு அதற்கு பதிலாக விசேட பொலிஸ் அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமல் வீரவம்ச அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்கள் என புலனாய்வுத் தகவல் மூலம் அமைச்சர் விமல் அறிந்துள்ளார்.
இதனால் அச்சங்கொண்ட விமல் வீரவம்ச இப்பாதுகாப்பு அதிகரிகளை உடனடியாக மாற்றுமாறு பாதுகாப்பு செயலாளரிடம் வேண்டியதற்கு இணங்க அமைச்சர் விமலுக்கு புதிய பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக தனது பாதுகாப்பு அதிகாரிகளை அவதானித்து வந்த விமலுக்கு அவர்களின் நடவடிக்கை மேல் சற்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது பொடர்பில் அமைச்சர் விமலுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலும் விமலின் சந்தேகத்தை உண்மைப்படுத்தியது.
இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக மாற்றப்பட்டு விசேட பொலிஸ் அதிரடிப்படை பாதுகாப்புனரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள எமது புலனாய்வு செய்தியாளர் தெரிவித்தார்.
