தனது ஆட்சியில் வியாபாரிகளுக்கு சுதந்திரமாக வியாபாரம் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்- மைத்திரி

வியாபாரிகளுக்கு சுதந்திரமாக தமது வியாபாரத்தை மேற்கொள்ள முடியுமான பின்னணியில் தனது ஆட்சியில் உருவாக்குவதாக பொது அபேட்சகர் மன்னாரில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

 

அத்தோடு தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக தான் முன்னின்று செயற்படுவதாகவும்,”இந் நாட்டில் 100 லட்சம் பேருக்கும் அதிகமானோர் மூன்று வேளை உணவின்றி பசியில் இருக்கின்றனர்.

 

விவசாயிகளுக்கு பிரச்சினைகள் அதிகமாக உள்ளளன.

 

சிறு நீரக நோய் நாடுபூராகவும் பரவியுள்ளது.அதேபோல் மீனவர்களுடைய பிரச்சனைகளை இந்தாரசு பார்க்கவே இல்லை.நாம் மிகத் தெளிவாக மீனவர்களுக்காக ஓய்வூதியத் திட்டமொன்றை உருவாக்குவோம்.
உள்நாட்டு மீனவர்களுக்கு தமது தொழிலை விருத்தி செய்து கொள்ளத் தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுப்போம்” தெரிவித்தார்.

Previous post இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் நடாத்தப்பட்ட அதான் சொல்லும் போட்டி
Next post அல்லே பிரதேச சபையிலுள்ள எதிர்க் கட்சி உறுப்பினர்கள் மூவர் அரசாங்கத்துக்கு ஆதரவு