சுயாதீன ஆணைக்குழுவை அமைத்து நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை – அமைச்சர் கரு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு முன்பு சுயாதீன ஆணைக்குழுவை அமைத்து நாடாளுமன்றத்தை கலைத்து, பொது தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அரச உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள் மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

 

‘எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொது தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெறும் கட்சியின் தலைவரை பிரதமராகவும் இரண்டாவதாக ஆசனங்களை பெறும் கட்சியின் தலைவரை உப பிரதமராகவும் நியமித்து இரண்டரை வருடம் தேசிய அரசாங்கத்தை அமைத்து நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

 

சப்ரகமுவ மாகாண சபையின் அபிவிருத்தி குழு கூட்டம் திங்கட்கிழமை(9) சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

Previous post டுபாயில் இலங்கை பெண் ஒருவருக்கு நீதிமன்றம் மூன்று வருட சிறை
Next post நாரஹென்பிட்டியில் கைப்பற்றப்பட்ட விமானம் ; தீர்ப்பு வெளியானது