சிங்கள ராவய தலைவர் உள்ளிட்ட 32 பேருக்கு பிணை

பலாங்கொடை, கல்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குரகல தொல்பொருள் இருக்கும் இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிங்கள ராவய அமைப்பின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

இவ்விடத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவேண்டாம் என்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தினால்  தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்றத்தில் நேற்று 28ஆம் திகதி ஆஜராகினர். சிங்கள ராவய அமைப்பின் தலைவர் உள்ளிட்ட 32 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  நோட்டீஸ் விடுக்கப்பட்டிருந்தது.

 

அவர்கள், தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜராகாத இருவருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன் வழக்கு செப்டெம்பர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

 

குரகல தொல்பொருள் இருக்கும் உரிமை கோருவதை உறுதிப்படுத்துமாறும் நீதவான், சிங்க ராவய அமைப்பின் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.(tm)

Previous post பாலமுனை பள்ளிவாயலுக்கு சென்ற முதலமைச்சர் ஒலிபெருக்கி சாதனங்களை பெற்றுக்கொடுத்தார்.
Next post மக்கள் வாக்களித்தமை அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடே