யாரு­டனும் விவா­தத்­துக்கு செல்ல வேண்­டாம்

எவன்கார்ட் விவ­கா­ரத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­ப­க் ஷவை விமர்­சித்­த­தாக கூறப்­ப­டு­வதில் எந்த உண்­மை­யு­மில்­லை­யென நீதி­ மற்றும் புத்­த­சா­சன அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில்,
எவன்கார்ட் விவ­காரம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சிரேஷ்ட அமைச்­ச­ரொ­ரு­வரை கடு­மை­யாக விமர்­சித்­த­தா­க பத்­தி­ரி­கைகள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. அது மட்­டு­மன்றி விமர்­சிக்­கப்­பட்ட அந்த அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக் ஷ என பத்­தி­ரி­கை­களில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிரேஷ்ட அமைச்­ச­ரொ­ரு­வரை பிர­தமர் விமர்­சித்­த­தாக கூறப்­படும் சம்­பவம் இடம்­ பெற்­ற­போது அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக் ஷ தாய்­லாந்­துக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்தார். அந்த வகையில் பிர­தமர் விமர்­சிக்­கப்­பட்­ட­வ­ராகக் கூறப்­ப­டுவர் அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக் ஷ அல்ல என்­பதை தெரி­விக்­கின்றோம் என்று தெரி­விக்­கப்­பட்­ டுள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எவன்கார்ட் விவ­காரம் தொடர்பில் சிரேஷ்ட அமைச்­ச­ரொ­ரு­வரை கடு­மை­யாக விமர்­சித்­த­தாக நேற்று முன்­தினம் இரவு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
சிங்­கப்­பூ­ருக்கு சென்­றி­ருந்த பிர­தமர் இலங்கை திரும்­பி­யு­வுடன் குறித்த சிரேஷ்ட அமைச்­சரை அழை த்து விமர்­சித்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி நேற்று முன்­தினம் அலரி மாளி­கைக்கு சென்ற குறித்த சிரேஷ்ட அமைச்­ச­ரிடம் எவன்கார்ட் விவ­காரம் தொடர்பில் அவர் கூறிய கருத்­துக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்று தரு­மாறு பிர­தமர் தெரி­வித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

குறிப்­பாக இதன் பின்னர் எவன்கார்ட் விவ­காரம் தொடர்பில் யாரு­டனும் விவா­தத்­துக்கு செல்ல வேண்­டா­மென குறித்த அமைச்­ச­ருக்கு பிர­தமர் அறி­வு­றுத்­தி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் திலக் மாரப்பனவின் இராஜினாமாவின் பின்னர் அரசாங்கத்துக்கு கிடைத்த கீர்த்தி யும் குறித்த சிரேஷ்ட அமைச்சரின் கருத்துக் களால் இல்லாமல் போவதாக இதன்போது தெரிவித்திருக்கிறார். (vi)

Previous post இதனை சமா­தா­ன­மாகத் தீர்த்­தி­ருக்­கலாம் – ஞான­சார
Next post மூன்றாம் தவணைக்காக பாடசாலை டிசெ 04 ஆம் திகதி விடுமுறை