சிறப்பு மிக்க புத்தர் சிலையை விற்க முயன்ற மூவர் கைது

தொல்பொருள் சிறப்பு மிக்க புத்தர் சிலையொன்றை விற்பனை செய்த தயாரான மூவர் குருநாகல் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் விசேட விசாரணைப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 447 கிராம் 150 மில்லி கிராம் நிறையுடைய புத்தர் சிலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சிலையை சந்தேகநபர்கள் 35 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.

சந்தேகநபர்கள் பேராதனை மற்றும் குருநாகல் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் இன்று (22) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். (ad)

Previous post மர்மமான முறையில் அக்குறணை பாடசாலை மாணவி மரணம்.
Next post கல்முனை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் மாஹிர் நியமனம்!