தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இந்தியா இழந்தது.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்ததால், தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இந்தியா இழந்தது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி 0–-1 என பின்தங்கியிருந்தது.

இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடந்தது.

இதில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது, அவுஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.

Previous post இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவோரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் –
Next post வருகின்றது அப்பிள் நிறுவனத்தின் iPhone 6 (வீடியோ இணைப்பு)