பேஸ்புக்கில் இஸ்லாத்திற்கு எதிராக எழுதியவர் வெட்டிக் கொலை: பங்களதேஷில் சம்பவம்

பேஸ்புக் இணை­யத்­தளப் பக்­கத்தில் இஸ்லாத்திற்கு எதி­ரான தனது கண்­ணோட்­டத்தை வெளிப்­ப­டுத்­திய  மாணவர் ஒருவர் படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

நஸ்­முதீன் சமாத் (26 வயது) என்ற மேற்­படி சட்ட மாணவரே இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்­நி­லையில் சம்­பவ தினம் டாக்கா பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அரு­கி­லுள்ள சந்­தியில் சென்று கொண்­டி­ருந்த அவரை மோட்டார் சைக்­கிளில் வந்த 3 ஆயு­த­தா­ரிகள் நெருங்கி அவ­ரது தலையை கத்­தியால் வெட்­டிய பின் அவர் மீது துப்­பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்­றுள்­ளனர்.

இதன்­போது நஸ்­முதீன் சமாத் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்ளார்.

ஜகன்னாத் பல்­க­லைக்­க­ழ­கத்தில் சட்­டத் ­து­றையில் பட்ட கற்­கை­நெ­றியை கற்று வந்த அவர் தனது பேஸ்புக் இணை­யத்­தளப் பக்­கத்தில் ‘எனக்கு மதம் கிடை­யாது’ என்ற தலைப்பின் கீழ் மத­வா­தத்­திற்கு எதி­ரான கருத்­து­களை எழுதி வந்த நிலையிலேயே இவர் கொல்லப்பட்டுள்ளார்.

Previous post அக்கரைப்பற்று முஸ்லிம் இளைஞன் கட்டாரில் சிறையில் அடைப்பு : வெளிவரும் அதிர்ச்சித் தகவல்
Next post ஹஸன் அலிக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் -நிசாம் காரியப்பர்