ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் பறவைகளை விரட்ட புதிய திட்டம்

qout213

இலங்கையின் தெற்கே மத்தளை இல் அமைத்துள்ள மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் பறவைகளின் இடையுருகளால் விமானங்களை இயக்குவதில் அசௌகரியங்கள் இருந்து வருவது அறிந்ததே,

 

அண்மையில் மயில்கள் விமான என்ஜினை சேதப்படுத்திய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

 

இப்பிரச்சினைக்கு தீர்வாக விமான சேவைகள் அமைச்சு செயலாளரினால் (Ravindra Ruberu) இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன , ராடர் கருவியின் முலம பறவைகளால் தங்கிக்கொள்ளமுடியாத ஒலி( high frequency sound) எழுப்பி அதன் மூலம் பறவைகளை விரட்ட  திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன்  விமானம் தரையிரங்கும் போதும் ,மேல் எழும்பும்  போதும் ஓடுபாதையில் வாகனங்கள் முலம் சென்று பறவைகளை விரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

தற்போது சீனா,இந்தியா ,ஜப்பான் ,ரஷ்யா ,ஜெர்மனி,ஆகிய நாடுகளில் ராடர் கருவியின் முலம பறவைகளை விரட்ட பயன்படுத்த படும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக விமான சேவைகள் உப தலைவர் கமல் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

 

 

Previous post மேர்வின் சில்வாவின் பழைய நினைவுகள்
Next post கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின வைபவம் -(புகைப்படம்)