ஜனாதிபதியின் நிகழ்வில் குண்டு வெடிக்கும்……

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ள நிகழ்வொன்றில் குண்டு வெடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு அனுப்பப்பட்ட போலி கடிதம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதியின் தலைமையில் எதிர்வரும் 23ஆம் திகதி நாள் முழுவதும் புத்தளத்தின் பல பாகங்களிலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் புத்தளம் ஷாஹிரா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில் மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூட்டம் திறந்து வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

ஷாஹிரா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் குண்டு வெடிக்கவுள்ளதாக புத்தளம் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு நேற்று (21) கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

எமது நாட்டில் இடம்பெற்ற இன பிரச்சினை, யுத்த முடிவின்போது தமிழ் மக்கள் பலர் கொல்லப்பட்டதாகவும், அதற்கு பதில் கொடுக்கும் வகையில் இந்த குண்டு வெடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஷாஹிரா முஸ்ஸிம் மகா வித்தியாலய கட்டடம் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டவுள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்படடுள்ளது.(ad)

 

Previous post “நாம் வாய்மூடி மௌனியாக இருப்பதன் காரணம் தெரியுமோ?” என்கிறார் ஞானசாரர்!
Next post முஸ்லிம் பாடசாலையில் படிக்கும் மாணவர்களாலேயே ஜனாதிபதியின் நிகழ்வில் குண்டு வெடிக்கும் என கடிதம் எழுதப்பட்டுள்ளது-அஜீத் ரோஹண