முஸ்லிம் பாடசாலையில் படிக்கும் மாணவர்களாலேயே ஜனாதிபதியின் நிகழ்வில் குண்டு வெடிக்கும் என கடிதம் எழுதப்பட்டுள்ளது-அஜீத் ரோஹண

-இரண்டாம் இணைப்பு-

மதுரங்குளி, கடயாமட்ட முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில் தரம் 13இல் கல்வி பயிலும் மாணவர்களால் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது என தெரிவிக்ப்படுகின்றது.

 

 

குறித்த திட்டத்தை தீட்டிய மாணவன் தமிழ் மாணவன் எனவும், கடயாமட்ட முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 13இல் கல்வி பயில்வதாகவும் பொலிஸார் மூலம் தெரியவந்துள்ளது.

 

 

நற்பண்புகளைக் கொண்ட குறித்த தமிழ் மாணவன், முஸ்லிம் பாடசாலையின் மாணவர் தலைவர் என்பதன் காரணமாக முஸ்லிம் மாணவர்கள் இம் மாணவனுடன் முரண்பட்டுள்ளனர். இதன் காரணமாக இந்த போலி கடிதம் எழுதப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த கடிதம் அதே பாடசாலையைச் சேர்ந்த மேலும் மூன்று மாணவர்களால் எழுதப்பட்டுள்ளது.

 

எனினும் இந்த மாணவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியமையின் காரணமாக மேலதிக விசாரணைகளை பொலிஸாரால் மேற்கொள்ள முடியவில்லை.

 

 

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் குறித்த கடிதம் போலியானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜீத் ரோஹண தெரிவித்தார். (ad)

Previous post ஜனாதிபதியின் நிகழ்வில் குண்டு வெடிக்கும்……
Next post ‘தேசத்துக்கு மகுடம்’ கண்காட்சி ஜனாதிபதியால் திறந்துவைப்பு!