ஈச்டர் தாக்குதல் குறித்த முழுமையான அறிக்கை வழங்கப்படவில்லை – கர்தினால் குற்றச்சாட்டு!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் குறித்த ஆயிரத்து ஐநூறு பக்கங்கள் எமக்கு வழங்கப்படவில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கையை அரசாங்கம் வழங்கிய போதிலும் அதன் முழுமையான அறிக்கை வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அறிக்கை குறித்த ஆறு இறுவட்டுக்கள் தமக்கு கிடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

70000 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் சுமார் 1500 பக்கங்கள் எமக்குக் கிடைக்கவில்லை என தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் மனைவியான ஹாடிய மற்றும் தாக்குதல்தாரிகளுடன் நெருங்கிப் பழகிய சரா ஜஸ்மின் போன்ற பிரதான சாட்சியாளர்களின் சாட்சி அறிக்கைகள் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் 99 வீதம் முடிவடைந்துள்ளதாக அரசாங்கம் கூறிய போதிலும் அதில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சஹ்ரான் பற்றி தெரிந்திருந்த 23 முஸ்லிம்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அனைத்து குற்றச்சாட்டுக்களையும் அவர்கள் மீது சுமத்த முயற்சிக்கப்படுவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

Previous post ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலில் வெற்றியீட்டும் – மரிக்கார்!
Next post ஜனாஸா எரிப்பிற்கு பொறுப்பேற்க மறுக்கும் கோட்டா – நூலில் எழு­தி­யி­ருப்­பது என்ன?