மக்கள் காங்கிரஸுடன் இணைந்துகொண்ட ரிஸ்லி முஸ்தபா!
முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபாவின் புதல்வர் றிஸ்லி முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளும் நிகழ்வு (31) சாய்ந்தமருது பாபா றோயலி மண்டபத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. ஐயுப் கான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன், கட்சியின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலி, கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான அப்துல் ரஸாக், அஷ்ரப் தாஹீர், மாஹீர், அன்ஸில் , முன்னாள் நீதிபதி அப்துல் கபூர், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் சுபைர், கலீல் முஸ்தபா, காதர், ஜுனைடீன், தாஜுடீன், முபீத் முன்னாள் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகளான ரியாஸ் ஆதம், அலரி றிபாஸ், கலாநிதி முனாஸ்தீன் உள்ளிட்டோருடன் கட்சியின் முக்கியஸ்தர்கள், ரிஸ்லி முஸ்தபாவின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் முன்னிலையில் இணைந்துகொண்டார்.

