ஏ.எம்.வலிதூர் பிராந்திய முகாமையாளராக பதவி உயர்வு

மக்கள் வங்கியின் திருகோணமலை பிராந்திய உதவிப் பிராந்திய முகமையாளராகக் கடமையாற்றிய ஏ.எம்.வலிதூர் பிராந்திய முகாமையாளராக பதவி உயர்வு பெற்று திங்கள் கிழமை 29.09.2014 திகதி முதல் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிண்ணியா மற்றும் திருகோணமலை போன்ற மக்கள்வங்கி கிளைகளில் முகாமையாளராகவும் அதன் பின்பு அம்மாவட்டத்தின் உதவிப்பிராந்திய முகாமையாளராகவும் கடமையாற்றி மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றியதுடன் அண்மையில் சாமசிறி தேசமானிய என்ற கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்

 

கொழும்பு பல்பலைக்கழக வர்த்தமானி பட்டதாரியான இவர் ஆரம்பக்கல்வியை  மூதூர்; மத்திய கல்லூரியில் கற்றதுடன் அக்கல்லூரியிலிருந்து முதன் முறையாக பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணர்களில் இவரும் ஒருவராவார் என்பது குறிப்பிடத்தக்கது

Previous post பொதுபலசேனாவுடன் பங்குடமையை ஏற்படுத்த விரும்பும் “969′
Next post சர்வதேச சிறுவர் தினம் அனுஷ்டிப்பு பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபரின் பிரோரனை சபையில் நிறைவேற்றம்