இலங்கையில் மீண்டும் மரண தண்டனை ?

நாட்டில் குற்றச்செயல்களின் சதவீதம் அதிகரிக்குமாயின் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசிக்கும் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் மரண தண்டனை உள்ளடக்கப்பட்டிருந்தாலும், 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதிக்கு பின்னர் எவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

 

1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதியே இறுதியாக இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 

2002 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி வரை மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

Previous post துபாயில் செல்போனில் பெண்ணை வீடியோ எடுத்தவருக்கு 06 மாத சிறை
Next post ஜனாதிபதிக்கு எதிராக சிறுவனை கடத்தி போலி நாடகம்