ஜனாதிபதிக்கு எதிராக சிறுவனை கடத்தி போலி நாடகம்

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது தாயைக் கடத்தி வைத்திருப்பதாக சிறுவன் ஒருவனைக் கொண்டு போலியான காணொளி தயாரித்து அரச ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் சுயாதீன தொலைக்காட்சியின் உதவிப் பணிப்பாளர் சுதர்மன் ரந்தலியகொடவுக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது கொழும்பு மஜிஸ்திரேட்.

 

குறித்த விளம்பரம் தொடர்பாக அச்சிறுவனின் தாயே முன்வந்து இது பணத்துக்காக உருவாக்கப்பட்ட நாடகம் எனவும் சிறுவனைக் கடத்திச் சென்றது அவது தந்தையே எனவும் முறையிட்டதைத் தொடர்ந்தே அதன் பின்னணி அம்பலமாகியிருந்ததோடு சிறுவனுக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

 

 

இந்நிலையிலேயே இதன் பின்னணியில் நேற்றைய தினம் குறித்த நபருக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous post இலங்கையில் மீண்டும் மரண தண்டனை ?
Next post பொத்துவில் பிரதேச அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் விஷேட கூட்டம்