உழைப்பவர் தினத்தில் அனைத்து உரிமைகளும் பெற்றிட உறுதி கொள்வோம்!.
உழைக்கும் மக்கள் உரிமைகேட்டு எழுச்சிகொண்ட உலகத்தொழிலாளர் தினத்தில் உழைக்கும் மக்களோடு இணைந்து
அனைத்துஉரிமைகளும் பெற்றிட உறுதிகொள்வோம் என்று
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்
டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது மேதினச் செய்தியில்
தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தச்செய்தியில்,….
மேதினம் என்பது ஒருவீரியதினம். உழைக்கும் மக்கள் உரிமைகேட்டு,ஒடுக்கு முறைகளை சுட்டெரிக்க எழுந்த சூரியதினம். உழைக்கும் மக்களோடு இணைந்து உலகெங்கும் ஒடுக்கப்படுகின்ற தேசமக்களும் தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து நிமிர்ந்தெழும் தினம்.
எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் தமிழ் பேசும் மக்கள் இங்கு இழந்தவைகளேஏராளம். அர்த்தமற்ற வெற்றுக் கோசங்களால் எமதுமக்கள் இழப்புகளையும், அவலங்களையும் ;சுமந்திருந்தாலும், வெல்வதற்கான நம்பிக்கைகளும்,உரிமைக்காகக் குரல் கொடுக்கும் நியாயங்களும் இன்னமும் இந்தபூமியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
இழப்புகளுக்கு காரணமாக இருந்த அர்த்தமற்ற
வெற்றுக கோசங்களுக்குள் தொடர்ந்தும் மயங்கிக்கிடக்காமல்,…அர்த்தமுள்ள எமது நடைமுறை யதார்த்த வழிமுறையில் வெல்வோம்
என்ற நம்பிக்கைகள் மட்டுமே இங்கு எஞ்சியிருக்கிறன.
தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை,….
இவைகள் வெறுமனே பேசிக் கொண்டிருப்பதற்கான வெற்று வேதாந்தங்கள் அல்ல.
அல்லது, வெறும் தேர்தல் வெற்றிக்காக உச்சரிக்கும் வெற்றுக் கோசங்களும் அல்ல.
இவைகள் அடைந்தே தீரவேண்டிய எமதுமக்களின் மாபெரும்
உரிமைசொத்து.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற
எமது நடைமுறை யதார்த்த வழிமுறை நின்று
தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமைக்காக நாம் தொடர்ந்தும்
உறுதிகொண்டுஉழைத்துவருகின்றோம்.
ஆனாலும் மாகாண சபை அதிகாரத்தை பொறுப்பெடுத்தவர்கள்
அதை அரசியல் இலக்குநோக்கி நகர்த்தாமல் உறங்கிக் கிடக்கிறார்கள்.
மாற்றம் ஒன்றைத் தவிர மாறாதிருப்பது ஒன்றுமில்லை.
தமிழ் பேசும் மக்களின் வாழ்விலும் மாற்றங்கள் நிகழும்
என்பதில் மாற்றம் இல்லை.
மாற்றங்களை உருவாக்கும் மாற்றுத்தலைமையாக நாமே
இருப்போம். அதற்காக தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்.
உழைப்பே வாழ்வாதார மூலதனம் என்பதை ஏற்றுசகலருக்கும் வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடுசெய்வோம்.
உழைக்கும் மக்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் பெற்றுநிமிர
வழி சமைப்போம்.
எமதுநிலம் எமதுமக்களுக்கே சொந்தம்! நிலமற்ற மக்களுக்காகவும்,
சொந்த நிலமிழந்து இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்காகவும்
நாம் ஆற்றிவந்த பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.
எமது மதிநுட்பசிந்தனையின் வழி நோக்கி சகலமக்களும்
அணிதிரண்டுவருமாறு இன்றைய மேதினத்தின் ஊடாக அறைகூவல் விடுக்கின்றேன்.
மேதினம் வெல்லட்டும்! உழைக்கும் மக்களின் உரிமைகள் ஓங்கட்டும்! தமிழ் பேசும் மக்களின் இலட்சியக்கனவுகள் நிறைவேறட்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
