எஸ்.எச்.எம்.ஜெமீல், எஸ்.பி.எம்.இஸ்மாயில் ஆகியோருக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாப பிரேரணை!

மூத்த கல்விமான் அல்ஹாஜ்.எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களது மறைவுக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று புதன்கிழமை மாலை 
மாநகர முதல்வர சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற போதே இந்த அனுதாப பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் இப்பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.
அதேபோன்று முன்னாள் கல்முனைப் பிரதேச சபை உறுப்பினர் நற்பிட்டிமுனை  எஸ்.பி.எம்.இஸ்மாயில் அவர்களின் மறைவுக்கும் கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
மாநகர சபை உறுப்பினர் எம்.சாலிதீன் இந்த அனுதாப பிரேரணையை சமர்ப்பித்தார்.
அத்துடன் நேபாளம் நில நடுக்க அனர்த்தம் தொடர்பிலும் கல்முனை மாநகர சபையில் அனுதாப பிரேரணை ஒன்று நிறைவற்றப்பட்டது.
மாநகர சபை உறுப்பினர் எஸ்.கமலதாசன் இப்பிரேரணையை சமர்ப்பித்தார்.
இம்மூன்று பிரேரணைகள் தொடர்பிலும் மாநகர முதல்வர் உட்பட உறுப்பினர்கள் பலரும் உரையாற்றினர்.
Previous post இலங்கை தர அங்கீகார சபை (Accreditation) பனிப்பாளர் சபை உறுப்பினர் நியமனம்
Next post உழைப்பவர் தினத்தில் அனைத்து உரிமைகளும் பெற்றிட உறுதி கொள்வோம்!.