தோல்விக்கான காரணம் -மிஸ்பா

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை டுபாயில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி தேற்றதற்கான காரணத்தை பாகிஸ்தானிய அணியின் தலைவர் மிஸ்பா உல்ஹாக் தெரிவித்துள்ளார்.

தட்டையான ஆடுகளத்தைக் கொண்ட இந்த விளையாட்டு திடலே தமது தோல்விக்கான முக்கிய காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் வியாழக்கிழமை சார்ஜாவில் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்டியிலும், டுபாய் ஆடுகளத்தைப் போலவே இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

 
இதேவேளை, ஐக்கிய அரபு நாடுகளின் விளையாட்டுத் திடல் நிபுணர்கள் இந்த ஆடுகள நிலமை குறித்து முன்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கோ அல்லது அணித்தலைவர் மிஸ்பா உல்ஹாக்கோ அறிவுறுத்தவில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் முன்னர் தெரியப்படுத்தப்பட்டிருக்குமாயின் விளையாட்டின் போக்கு மாறி இருக்கலாம் எனவும் அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதேவேளை, இரண்டாவது டெஸ்ட்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற நிலையில் தரப்படுத்தல் வரிசையில் இலங்கை அணியினர் முன்னேறியுள்ளனர்.

குறிப்பாக மஹேல ஜயவர்தன சர்வதேச ரீதியாக முதல் 20 வீரர்களில் ஒருவர் என்ற நிலையை எட்டியுள்ளார்.

இதநிடையே எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும் 3 வது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றிகொள்ளும் பட்சத்தில் கிரிக்கட் அணிகளின் தரப்படுத்தல் வரிசையில் இலங்கை அணி பாக்கிஸ்தான் அணியை விட முன்னேறி 5 வது இடத்தை பெறும்.

Previous post முகம்மது நிப்ராஸ் என்ற இளைஞனை காணவில்லை
Next post அடுத்த மாதம் முதல் மும்மொழிகளில் தேசிய அடையாள அட்டை