இரண்டாயிரம் பேருக்கு இரட்டை பிரஜாஉரிமை வழங்

வௌிநாட்டு குடியுரிமை பெற்ற 2000 இலங்கையருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கும் உத்தியோகபூர்வ வைபவம் இன்று (17) காலை 9.30 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வௌிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளை மீண்டும் தாய்நாட்டுடன் இணைக்கும் நல்லிணக்கத் திட்டம் என்ற தொனிப்பொருளில் வௌிநாட்டு பிரஜா உரிமை வழங்கப்பட்ட 2000 பேருக்கு இவ்வாறு இரட்டை பிரஜாஉரிமை வழங்கப்பட்டது.

1987ஆம் ஆண்டில் இலங்கைக்கு இரட்டை பிரஜாஉரிமை வழங்கும் செயன்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று தொடக்கம் இது வரையில் சுமார் 40,000 பேருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி தொடக்கம் இலங்கையில் இரட்டை பிரஜாஉரிமை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருந்து. இவ்வாண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இத்திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதற்கு முன்னர் நடைபெற்ற இரு விழாக்களின் போது சுமார் 600 பேருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்துறை, வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார விவகார அமைச்சு மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் அமைச்சர்களான எஸ்.பி.நாவின்ன, மங்கள சமரவீர, டி.எம்.சுவாமிநாதன், ஜோன் அமரதுங்க, அர்ஜுன ரணதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
AR
Read 36 times

Previous post மூன்றாம் தவணைக்காக பாடசாலை டிசெ 04 ஆம் திகதி விடுமுறை
Next post திப்புசுல்தான் பிறந்தநாள் விழா கொண்டாட அனுமதிக் கேட்டு மனு