20 – 20 உலகக் கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணி சுவீகரித்தது.
இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணி சுவீகரித்துக் கொண்டது.
இங்கிலாந்து அணியுடான இறுதிப் போட்டியில் மோதிய மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தி உலகக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி இருபது ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட் இழப்புக்களுக்கு 155 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணியானது 19.04 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு இவ் இலக்கை எட்டியது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களான சாமுவேல்ஸ் – 85 ஓட்டங்களையும் பிறித்வைட் 34 ஓட்டங்களையும் எடுத்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை மேற்கிந்திய அணி இக்கிண்ணத்துடன் இரண்டாவது தடவையாக சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2016ம் ஆண்டுக்கான இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை ஆண்கள் மற்றும் பெண்கள் மேற்கிந்திய தீவுகள் அணி சுவீகரித்துள்ளமை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
More Stories
ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் ஆக்ஸ்போர்டு ஜனாதிபதி கிண்ணம் 2024 – ரணில் தலைமையில் இறுதிப் போட்டி!
புனித தோமஸ் கல்லூரி மற்றும் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி ஆகியன, ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் 80களின் குழுவினால் நடத்தப்படும் 14வது அழைப்பு பாடசாலைகளுக்கிடையான கால்பந்து...
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் டேவிட் வார்னர்!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடது கை துடுப்பாட்ட வீரரான டேவிட் வார்னரின் ஆட்டம் குறித்து சமீப காலமாக விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில்தான் பாகிஸ்தானுக்கு எதிரான...
விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகள் இடைநிறுத்தம் – ஹரின் பெர்னாண்டோ அதிரடி!
இலங்கையில் ஐந்து தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார். 1973...
மீண்டும் கிரிக்கெட் – புதிய விளையாட்டுத்துறை அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!
நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதியளித்துள்ளார். புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து...
IPL தொடரிலிருந்து தடை செய்யப்படும் இலங்கை வீரர்கள்?
ஐபிஎல் தொடர் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி அஹமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டி 4 முறை சாம்பியன் கோப்பை வென்ற சென்னை...
IPL வாய்ப்பு: இந்தியா செல்கிறார் வியாஸ்காந்!
இந்தியாவில் நடைபெறவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் (IPL) தொடரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந் தற்போது இணைந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவனான...
