கந்தளாயில் நஞ்சு கலந்த நீரினைப் பருகிய விவசாயி மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில்

திருகோணமலை கந்தளாயில் நஞ்சு கலந்த நீரினை பருகிய விவசாயி ஒருவர் மயக்கமுற்ற நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கந்தளாய், நான்காம் குலனி, பகுதியைச் சேர்ந்த பி.குலசேகர வயது 53 என்பவரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) மாலையில் குறித்த நபர் தனது வயலுக்கு நஞ்சு கலந்த எண்ணை விசிறுவதற்காக வயலுக்குச் சென்று எண்ணை விசிறி விட்டு களைப்பில் வாய்க்காலில் ஓடிய நீரினை நன்றாக பருகியுள்ளார் பின்பு அரை மணித்தியாலயத்தின் பின்னர் திடிரென மயக்கமுற்று விழுந்ததால் அருகிலுள்ள வயல்காரர்களினால் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குறித்த நபரின் வீட்டாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

வாய்க்காலில் திட்டமிட்டு நீரில் கலந்து விடப்பட்டுள்ளதாக அல்லது எண்ணை(நஞ்சு) விசிரிவிட்டு உபகரணத்தினை கழுவிய போது நீரீல் நஞ்சு கலந்துள்ளதா போன்ற விசாரணைகளை கந்தளாய் வைத்தியசாலைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous post வெல்லம்பிட்டியில் இடம்பெற்ற இப்தர் நிகழ்வு
Next post கல்குடா இளைஞர் காங்கிரஸ் ஏற்பாட்டில் இறால் ஓடையில் இப்தார் நிகழ்வு