அழுகிய மாட்டின் தோல் மற்றும் எச்சங்கள் வீச்சு; இது இனவாதத்தை தூண்டும் முயற்சியா?

ஓவத்தை கிராமத்தை தாண்டி கண்டி பிரதான பாதைக்கு செல்கின்ற வீதியில் இனம் தெரியாதவர்கள் சிலரினால் மாட்டின் தோல் மற்றும் எச்சங்கள் போடப்பட்டிருந்தன.

 

இந்த இடத்தில் துர்நாற்றம்  தாங்க முடியாமல் மிகவும் சிரமத்தோடு நேற்று முன்தினம் ஓவத்தை கிராம முஸ்லிம் மக்கள் இதனை புதைத்துள்ளனர்.

 

இந்த மாட்டின் தோல் மற்றும் எச்சங்கள் ஓவத்தை பகுதிக்கு வெளியில் இருந்தே கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகிக்கின்றனர்.

 

இப்பிரதேசத்தில் வாழும் அந்நிய மத சகோதரர்களோடு மிகவும் ஒற்றுமையாக முஸ்லிம் சகோதரர்கள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.(MW)

ovatha1 ovatha2 ovatha3

Previous post இறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கு கல்முனை மாநகர சபை உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் – உலமா கட்சி
Next post அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பது ஹராம்: அஸாத்சாலி