கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகருடன் ஹாபீஸ் நசீர் சந்திப்பு

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பங்களாதேஷ் உயர்தானிகர் மொஹமட் சுபீர் ரகுமானுடன் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

 

கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அத்மிரல் மொஹான் விஜயவிக்ரம, மற்றும் கிழக்கு மாகாண விவசாய கால்நடை மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் ஆகியோருடன் இந்தச் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.

 

வாழ்வாதாரம், கால்நடை, விவசாயம், மீன்பிடித் துறைகள் போன்றவற்றுக்கு முதலீடு செய்வது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையிலான நல்லுறவினை மேற்கொள்ளுவது தொடர்பாகவும் பேசப்பட்டன.

Previous post ஐ.ம.சு.கூ போனஸ் ஆசனங்கள்
Next post சிலோன் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்திடம் 1 பில்லியன் நட்ட ஈடு கோரியுள்ளார் கரு ஜயசூரிய