பெருநாளின் பின்னால்
Mohamed Nizous
கேட்ட பயான் என்ன
போட்ட தொப்பி என்ன
ஷவ்வால் பிறை வானில் தோன்ற
வெளவால் போல் தலை கீழ் என்ன
ரமழானிலே பக்தி
ராவையிலே தஹஜ்ஜத்
அமல்கள் செய்த சில பேர்
அடுத்த பக்கம் பாய்வார்
எடுத்த பயிற்சி மறப்பார்.
நாடியிலே தாடி
நல்லா பக்தி கூடி
பெரு நாள் இரவு சலூனில்
ஒரே வழியாய் வழிப்பார்
நபி வழியை மறப்பார்
பெரு நாளில் கூடி
பியர் அடிக்கும் போதே
பயம் பக்தி எல்லாம்
பஞ்சாகிக் பறக்கும்
பாவம் மனதை நிறைக்கும்
முன் வரியைப் பிடித்து
முப்பது நாள் தொழுதோர்
பெரு நாளின் பின்னால்
முக வரியைக் காணோம்
முக வரியைக் காணோம்
கஞ்சிக் கோப்பை கழுவி
கவிழ்த்து வைக்கும் போதே
பக்தியையும் கவிழ்த்து
பழைய படி திரிவார்
பழைய படி திரிவார்.
ரமழானில் இருந்த
ரஹ்மான்தான் தொடர்ந்தும்
இருக்கின்றான் ஆனால்
இவர் அதனை மறப்பார்
இஷ்டத்துக்கு நடப்பார்.
More Stories
பேராசிரியர் நவாஸ்தீன் குறித்து மௌனகுருவின் குறிப்புக்கள்!
மனம் மகிழும் தருணம் இது, அன்று மாணவன் பின்னர் பேராசிரியர். இன்று கல்வித் துறைத் தலைவர் பேராசிரியர் நவாஸ்தீன் 1976 -1980 வரை யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில்...
டாக்டர் ஜலீலா முஸம்மில் எழுதிய “சிறகு முளைத்த மீன்” கவிதை நூல் வெளியீடு!
ஏறாவூரைச் சேர்ந்த வைத்திய அதிகாரி ஜலீலா முஸம்மில் எழுதிய "சிறகு முளைத்த மீன்" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா, ஏறாவூர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கலாசார...
கம்யூனிச கிருமி மதம் மாறியது
இஸ்லாமிய வைரஸ் .................. உரத்த குரலில் அது அறிவிக்கப்படுகிறது ' கொள்ளை நோயை கொண்டு வந்த இஸ்லாமியர்கள் உடனடியாக வெளியே வரவும் நீங்கள் பதுங்கியிருக்கும் ஒவ்வொரு கணமும்...
ஏய் தீவிரவாதியே…!!!
Raazi Muhammeth Jabir உடம்பு வெடித்துச் சிதறிய இன்பமா உனக்கு? உன் உயிர் உடம்பிலிருந்து பச்சைக் கிளிப் பறவையாய்ப் பறந்து சென்றதா? கஸ்தூரி கலந்த துணியில் உன்...
உனக்கு நன்றிகள்
Mohamed Nizous எமது எகோதரங்களுக்கு இலகுவாக ஷஹீத் பதவி எடுத்துக் கொடுத்த உனக்கு எமது நன்றிகள் ஊடகத்தின் முகத்தை உரித்துக் காட்டி வேடதாரிகளை எமக்கு வெளிப்படுத்தி'னாய்'- நன்றிகள்...
இழந்து போன எங்கள் மரியாதை
Mohamed Nizous கொடுக்கல் வாங்கல்களில் குறைகள் செய்யார் என அடுத்தவர் போற்றும் விதம் அழகாய் இருந்தார் அன்று 'குடு'க்கள் வாங்கலில் கொலையும் செய்வாரென எடுத்துப் பேசுமளவு இழிவாய்ப்...
