எனது உள்ளம் கனிந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்

இக்பால் அலி


நோன்புப் பெருநாளை மனநிறைவுடன் கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளவதில் பெருமிதம் அடைகின்றேன் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்
நோன்பு மாதம் என்பது முஸ்லிம்களிடையே சகிப்புத் தன்மையை பறைசாற்றுகின்ற உயர்வான மாதம். கஷ்டத்தையும் துன்பத்தையும் சகித்துக் கொள்வதும் அதிகளவு நற்கருமங்கள் செய்கின்ற உன்னதமான மாதம்.

அதேவேளை பொறுமையானது மனிதனுடைய வாழ்க்கை முறையிலும் ஒர் அங்கம் என்பது மட்டுமல்ல அவையே மன உறுதிக்கும் வெற்றிக்கும் அவசியமாவையாவை என எடுத்துக்காட்டுகின்ற மாதம்.

எனவே இந்தக் காலத்தில் கற்றுக் கொண்ட பாடங்களை எமது நாட்டிலுள்ள ஒவ்வொரு முஸ்லிம்களும் இயல்பாகவே தன்னுள் உள்வாங்கி தம் சமூகத்தினரோடு மட்டுமல்ல பிற மத சமூகத்தினரிடையே பரஸ்பர அன்போடும் அன்னியோன்னிய உறவோடும் மனநிறைவோடும் வாழும் சூழலை அதிகப்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகும்.

இனி வரும் காலங்களிலிருந்து எமக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகளை மறந்து இயக்கங்களுக்கிடையே நல்லுறவு, எல்லோரும் பரஸ்பரமாக ஒன்றுபட்டுச் செயற்படல் போன்ற உயர் பண்புகள் எமது சிந்தனையிலும் செயற்பாடுகளிலும் வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தல் வேண்டும் என்பது என்னுடைய அவா.

எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமன்றி உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் என்னுடைய ஈதுல் பித்ர் பெருநாள் நல்வாழ்துக்களை வாஞ்ஞையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இக்பால் அலி
11-06-2018

Previous post நாமல் ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி
Next post முஸ்லிம்கள் பொறுமையோடும் நிதானமாகவும் செயற்பட வேண்டும்.