சுரங்கத்தில் வாடிய தொழிலாளி 17 ஆண்டுகளுக்கு பின் மீட்பு

-ஜின்ஜியாங்-

சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் ஏராளமான சுரங்கங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள ஒவ்வொரு சுரங்கத்திலும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் கடந்த 1997–ம் ஆண்டில், இப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டதால் ஏராளமான சுரங்கங்கள் சரிந்து அப்படியே மண்ணோடு மண்ணாக புதைந்தன. இச்சம்பவத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணிற்குள்ளேயே சமாதியாகினர். ஆனால் செங்வாய் (59) என்ற தொழிலாளி மட்டும் உயிருடன் இருப்பது சில தினங்களுக்கு முன்பு தெரிய வந்தது.

 

சுமார் 17 வருடங்களாக மூடப்பட்ட சுரங்கம் ஒன்றின் உள்ளே தனிமையில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்து வந்த இவர் எலிகளை பிடித்து தின்றும், சுரங்கத்தில் வளரும் ஒரு வகையான பாசி செடிகளை சாப்பிட்டும் உயிர் வாழ்ந்துள்ளார். இதனால் உடல் மெலிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அவரை, சில தினங்களுக்கு முன்பு சுரங்க ஆய்வாளர்கள் உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

மேலும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இவர் மீட்கப்பட்ட சம்பவம் உலகெங்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இது ஒரு கின்னஸ் சாதனையாகவும் கருதப்படுகிறது.

Previous post துபாயில் நடந்த சாலை விபத்தில் 10 இந்தியர்கள் உட்பட 15 பேர் பலி
Next post நூறு நூறாய் இனவாத அட்டகாசங்கள்