நூறு நூறாய் இனவாத அட்டகாசங்கள்

நன்றி -ஏ.ஏச்.எம்.நவா-ஸ்  ,  –  ஈழக்கவி-

 

இன்னும் ஒரு கடை எரித்தாயிற்று

அந்த சாம்பலில்

இனத்துவேசிகள்

தேநீர் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

நேற்றைய ஒரு நாள்

பள்ளிவாசலில்

பன்றி இரத்தம் கொட்டியாயிற்று

அந்த சிவப்பில்

இனவாதிகளின் வீரியம் விரிந்துள்ளது.

 

அதனால்தான்

இன்றும் ஒரு பள்ளிவாசல்

மண்ணோடு மண்ணாக்கப்பட்டது.

 

சட்டப் பத்திரிகைகளில்

பாலியல் வன்முறைக் கதைகள்

கற்பனையாய் எழுதப்பட்டு

உயிரூட்டப் படுதல்

பின்னர் அவை

ஆவேசமாய் ஊர்வலம் போதல்

பிறகு

பிசாசுகள் தீயை கக்குதல்.

 

இதுவே தொடர்ந்தால்

நம் இருப்பு

பேய்களின் சுடுகாட்டிலா.

 

ஒன்று இரண்டு எனத்தொடங்கிய

இனவாத அட்டகாசங்கள்

நூறு நூறாய் வெடிக்கத் தொடங்கியுள்ளது

அரசுக்கு அவை

வரவேற்பு பட்டாசுகள் போல.

 

என்ன செய்யப்போகிறோம்

இனியும்

நாம் என்ன செய்யப்போகிறோம்

 

Previous post சுரங்கத்தில் வாடிய தொழிலாளி 17 ஆண்டுகளுக்கு பின் மீட்பு
Next post அமைச்சர் அதாவுல்லாவால் 30உள்ளுராட்சிசபைகளுக்கு டபள் கெப் வாகனங்கள் கையளிப்பு