குஜராத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் மீது தாக்குதல்!

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக விடுதியின் கட்டிடத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் ஒருவர் உட்பட்ட சில மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழக விடுதியில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினரால் தாக்கப்பட்டதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் ஏ பிரிவு விடுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் தஜிகிஸ்தானைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் 20-25 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரவு 10.50 மணியளவில், அரசாங்கத்தை சேர்ந்த குஜராத் பல்கலைக்கழகத்தின் விடுதிக்குள் ஏறக்குறைய இருபது பேர் நுழைந்து, வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தாங்கள் தங்கியிருந்த பகுதியில் தொழுகை நடத்துவதற்கு ஆட்சேபனை எழுப்பியபோது இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்பிரிக்கா உட்பட்ட நாடுகளின் சுமார் 300 சர்வதேச மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous post கிண்ணியா அல் – இர்பான் மகா வித்தியாலயத்திற்கு தௌபீக் விஜயம்!
Next post ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலில் வெற்றியீட்டும் – மரிக்கார்!