முஸ்லிம் காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா

 

முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்கு அளித்த சகல வாக்காளர்களும் அக் கட்சின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதை சகல ஆதரவாளர்களும் தங்கள் சிந்தனைக்கு கொண்டு வருமாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா ஆலோசனை ஒன்றை முன் வைக்க வேண்டும் என்று தனது ஊடகஅறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

தற்போது கூழ் முட்டை ஆகிப் போயுள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது கடந்த காலங்களில் நிகழ்ந்த பலவிதமான உரிமை இழப்புக்கள், தேர்தலில் மக்களுக்கு கூறிய வாக்குகளை நிறை வேற்ற தவறியமை, தீர்மானம் எடுப்பதில் பல வர லாற்றுத் தவறுகள் விட்டதை தாங்களே ஒப்புக் கொண்டமை, மக்களின் அவலங்களை பாராளும் மன்றத்தில் உரிய காலத்தில் எத்தி வைப்பதில் அசமந்தப் போக்கு, தீர்மானம்களை எடுத்துரைப்பதில் தலைமத்துவத்தின் ஒரு வகையான அச்ச உணர்வு, கட்சி முக்கிய உறுப்பினர்களை நிர்வகிப்பதில் சீர் கேடும்,நிர்வாகத் திறமை இன்மையும், மிகவும் சிக்கலான பிரச்சினைகளில் சமுகம் தீர்மானம் ஒன்றை எதிர் நோக்கும் போது சமயக் கிரிகை என்ற சாக்கைக் கூறி நாட்டை விட்டும் வெளியேறுதல் இது போன்று இன்னும் பல மக்கள் அறிவர்.

 

இவ்வாறு மேல் கூறப்பட்டுள்ள கட்சியன் செயல் பாடுகளை காரணிகளாக முன் வைத்து அக் கட்சி மீது நன்பிக்கை அற்றுள்ள கட்சி ஆதரவு ஆளர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை அக் கட்சின் மீது கொண்டு வருவது அக் கட்சி ஆதரவு ஆளர்கள் உரிமை.

 

ஆதரவு ஆளர்களே நான் இங்கு ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன், வாழ்வின் இலக்கை சரியான முறையில் வரையறை செய்து விட்டால் செயல்பாட்டில் சோர்வு இருக்காது. வெறுப்பு இருக்காது மற்றும் எரிச்சல் இருக்காது. இலக்கை வரையறை செய்யும்பொழுது அது அடையக்கூடிய, சாதிக்க கூடிய இலக்காய் இருப்பது அவசியம்.நமக்கு நாமே வரையறுத்து கொண்டால் தான் அது இலக்கு! மற்றவர் நம் மீது திணித்தால் அதன் பெயர் தண்டனை!

 

ஒரு மனிதனின் எல்லாவகையான செயல்பாடுகளையும் முடிவு செய்வது அவனது இலக்குதான்! எந்த குறிக்கோளும் இல்லாமல் சுற்றி திரிபவனை இலக்கில்லாமல் உள்ளான் என்கிறோம். நேர்மறையான சூழலிலும் நாம் எடுக்கும் தவறான முடிவு நமக்கு தோல்வியை தரும். முற்றிலும் எதிர்மறையான சூழலிலும் அல்லது தோல்வியின் விளிம்பிலும் நாம் எடுக்கும் சரியான முடிவு தோல்வியை வெற்றியாக மாற்றிக்காட்டும்.

aatham baava 2

Previous post மைத்திரிபால சிறிசேனவை சிறுபான்மை மக்கள் தாராளமாக நம்பலாம்!
Next post திகாமடுல்ல தொகுதியில் நான்கு இலட்சத்து 65 ஆயிரத்து 757 பேர் வாக்களிக்கத் தகுதி