உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபாயில்
உலகின் மிகப்பெரிய, அதிநவீன விமான நிலையம் துபாயில் 3200 கோடி அமெரிக்க டொலர் செலவில் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் மிகவும் பரபரப்பான இரண்டாவது விமான நிலையமாக இயங்கிவரும் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் மற்றோரு சர்வதேச விமான நிலையத்தை புதிதாக கட்ட ஏற்பாடு செய்து வருகிறது.
32 பில்லியன் (3200 கோடி) அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்படும் இந்த விமான நிலையத்தை சுமார் நான்கரை கிலோமீட்டர் நீளமுள்ள 5 ஓடுபாதைகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையம், 2020-ம் ஆண்டு 120 மில்லியன் பயணிகளையும், 12 மில்லியன் டன் சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டதாகவும், சுமார் 200 விமானங்களை ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்கும் வகையிலும் உருவாகவுள்ளதாக தெரிகிறது.
மேலும், இந்த புதிய விமான நிலையம், உலகின் மிகப் பெரியதும், அதிநவீன வசதிகள் கொண்டதாகவும் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More Stories
கடத்தல், சித்திரவதை, மிரட்டல்” – துபாய் ஆட்சியாளர் மீதான குற்றச்சாட்டுகள்
துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமத் மீது அவரது மனைவி பிரிட்டன் நீதிமன்றத்தில் முன்வைத்த, "கடத்தல், திரும்பி வருமாறு கட்டாயப்படுத்துதல், சித்திரவதை மற்றும் அச்சுறுத்தல் விளைவித்தல்" முதலிய குற்றச்சாட்டுகள்...
பிரிட்டனில் தப்பி வாழும் துபாய் இளவரசி
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகாரம் மிக்க தலைவர்களில் ஒருவரான துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமை விட்டு சென்றுவிட்ட அவரது ஆறாவது மனைவி, முழு சம்மதமில்லாமல்...
பிரிட்டனில் மறைந்திருக்கும் துபாய் இளவரசி: ஆடம்பரமான வாழ்க்கையை விட்டு சென்றது ஏன்?
ஃபிராங் காட்நர்பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் துபாயிலுள்ள தனது கணவரை விட்டு சென்ற இளவரசி ஹயா லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். துபாயை ஆளும் ஷேக் முகமது அல்...
காணாமல் போன துபாய் இளவரசி
BBC காணாமல் போனதாக அஞ்சப்பட்ட துபாய் இளவரசியின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. துபாயின் ஆட்சியாளர் மகள் ஷேக் லடிஃபா கடந்த மார்ச் மாதம் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதற்கு முயற்சி செய்ததாக...
துபாய் லாட்டரியில் ரூ.18 கோடி பரிசு வென்ற இந்தியர்
துபாயில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் விற்கப்படும் பிரசித்தி பெற்ற பிக் டிக்கெட் அபுதாபி என்ற லாட்டரியில் இந்தியர் ஒருவர் 18 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார்....
கேரளா பழம், காய்கறிக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால், அம்மாநில பழம், காய்கறிகளை இறக்குமதி செய்ய ஐக்கிய அரபு அமீரக அரசு தடை விதித்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும்...
