முஸ்லிம் காங்கிரசின் முழு முட்டாள் தனம்
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபகர் மொஹிடீன் பாவா
தேர்தல் வின்ஜாபனம் வெளி வந்த பிறகு தீர்மானம் எடுப்போம் என்பது முழு முட்டாள் தனம். வெளி வருவதுக்கு முன்பே மக்களிடம் கலந்து ஆலோசித்து அக் கோரிக்கைகள் அவர்களிடம் சமர்ப் பிக்கப் பட வேண்டும். ஆனால் இது வரை எத்தகையான கோரிக்கைகளும் முன் வைத்துள்ளதாக செய்திகள் வெளிவரவில்லை. இத் தருணத்தை தவற விட்டு விட்டு பேரம் பேசும் மந்திர வார்த்தை சிறு பான்மைன்ரிடம் முன் வைக்கப் பட்டு சகல சுக போகம்களையும்,மக்கள் அனுபவிப்பதை விட தாங்களும் தங்கள் உறவினர்களுமே அனுபவிக்க உத்தேசித்து உள்ளனர் போலும்
துணிந்து நில் , எழுந்து செல் என்ற வகையில் காரியங்களில் செயல் படாமல் கள்ளன் இரவில் ஈரச் சாக்குடன் கள்ளக் கோழி பிடிக்கப் பதுங்குவது போல் அரசியல் சாணக்கியம் செய்வது சமூகத்துக்கு நல்லதன்று. ஆகையால் தான் எங்களது கட்சி மக்களிடம் எவ்வாறான தேவைகள் , காரியங்கள் வரப் போகும் புது அரசியலிடம் முன் வைக்கப் பட வேண்டும் என்பதைக் கோரி நிற்கிறது. எதையும் மக்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதே எமது கட்சின் கொள்கை .
மக்களுக்காகவே கட்சி ,காட்சிக்காக மக்கள் இல்லை
உங்களது அறிவு பூர்வமான ,நடை முறைக்கு சாத்தியப் படகூடிய கோரிக்கைகள் என்ன என்ன முன்வைக்கப் படவேண்டும் என்பதை எங்களுக்கு அறிவுங்கள் தொடர்பு :ndphrinfo@gmail.com. ,
அல்லது முகப் புத்தகம் மூலம் உங்களது கருத்துகளை முன் வைக்கலாம் . அவைகளை கருத்தில் கொண்டு எங்களது தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி அவைகளை உரிய முறையில் சமர்ப்பிக்கும்
