முஸ்லிம்களின் மனங்களில் ஏற்பட்டிருக்கும் விரக்தியை வெல்ல முடியுமா…?

(நன்றி ராவய வார இதழ்)

 

‘மக்கள் என்னுடையவர்கள்’ என்று கடந்த வாரத்தில் ஜனாதிபதி கூறியதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மக்கள் என்னுடையவர்கள் என்று கூறும் ஜனாதிபதி அந்த மக்களைக் கவனிப்பது யாரைப்போன்று என்பது ஜனாதிபதியினாலும் அரசாங்கத்தினாலும் இந்நாட்களில் நிகழ்த்தப்படும் நடவடிக்கைகள் மூலம் காணக்கூடியதாகவுள்ளது.

 

கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலின்போது அரசாங்கமும் ஜனாதிபதியும் ஊவா மாகாண வாக்காளர்களை சந்தித்தது , எவ்வளவேனும் ஒரு தொகையை அவர்களின் கைகளில் தினித்தால் அவர்களை தமக்கு ஏற்ற விதத்தில் மாற்றிக்கொள்ள முடியும் என்ற நினைப்பிலாகும். ஆகவே, சட்ட விரோத நீதிமன்ற உத்தரவின்படி நடைமுறைப்படுத்தப்பட்ட வரட்சி நிவாரணத்திலிருந்து ‘சில் புடவை’ கொடுப்பது வரை பல்வேறு உதவிகளை இனாமாக பங்கிட்டார்கள்.

 

ஊவா தேர்தலின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலொன்றை நடத்தவேண்டுமென்று ஜனாதிபதி தீர்மானித்திருந்தமையால் தற்போது ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு பலவகையானவற்றை பகிர்ந்தளித்துக் கொண்டிருக்கிறார். வரவு – செலவு திட்டத்தை அறிவிக்க இருந்த கிட்டிய சந்தர்ப்பத்தில் மின்சார கட்டணத்தைக் குறைப்பதற்கான அட்டவணையைக் கூட தயார்படுத்தாமல் ஜனாதிபதியின் தனிப்பட்ட இஸ்டத்திற்கு மின்சார கட்டணத்தை குறைத்தார். மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு விலையும் அவ்வாறே தான் குறைக்கப்பட்டது.

 

இவ்வளவு காலமும் எந்தவொரு வரவு – செலவுத் திட்டத்தின் போதும் மனதால் கூட நினைத்திராததை தேடிப் பெற்றுக் கொள்வது தொடர்பாக எந்தவொரு உருப்படியான வேலைத்திட்டமும் இல்லாமல் இந்த வரவு – செலவு திட்டத்தில் கையை விரித்துக் கொடுப்பதற்கு ஜனாதிபதி தன்னிஷ்டத்திற்கு முடிவெடுத்திருப்பது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பில் அவரின் மனதில் இருந்த சந்தேகத்தின் காரணமாகத்தான் என்பது தெளிவாக புரிந்துகொள்ளக்கூடியதொன்றாகும். அதேநேரம் அலரி மாளிகையில் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஐயாயிரம் பேர் என்ற வீதத்தில் ஒவ்வொரு கட்டமாக அதிகத் தொகையானவர்களை வரவழைத்து அவர்களை உபசரிப்பதோடு ஜனாதிபதித் தேர்தல் பற்றி அரசியல் உரையாடல் ஒன்றையும் நடாத்துவதற்கான வேலைத்திட்டமொன்றையும் பொது மக்களின் பணத்திலிருந்து நடத்திச் செல்கின்றார்.

 

அவற்றுக்கு பிழையான நிர்வாக முகமொன்றைக் காட்டிக் கொண்டு இருப்பது தங்களுடைய தனிப்பட்ட பணத்திலிருந்து அதற்காக செலவலிக்காமல் நாட்டில் வரி செலுத்தும் மக்களின் வரி பணத்திலிருந்து தேர்தல் வேலைத்திட்டம் தொடர்பில் வெட்கமற்ற முறையில் பயன்படுத்திக் கொள்வதாகும்.

 

தற்போது புதிய கரட் கிழங்கு கிடைத்திருப்பது நாட்டின் முஸ்லிம் மக்களுக்கே. பொருளாதார கஸ்டத்தில் இருக்கும் அவர்களை அரசாங்கத்தின் செலவில் மக்கா செல்வதற்கு சந்தர்ப்பமொன்றை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி அண்மையில் திருகோணமலைக்குச் சென்ற போது கருத்து வெளியிட்டார். வருடமொன்றிற்கு 2500 பேர் வரை மக்காவிற்கு செல்லக்ககூடியதாக, கோட்டால் கிடைக்கும் நிலைமையில் ஜனாதிபதியின் கொடுப்பனவின் மூலம் பொருளாதார பிரச்சினையில் இருக்கும் முழு முஸ்லிம் சமூகத்திற்காகவும் இந்த கொடுப்பனவை நடைமுறைப்படுத்துவதற்கு எவ்வளவு காலம் செல்லும் என்பதை தேடிப்பார்க்க வேண்டியது பொது மக்களின் கடமையாகும். என்றாலும், மிகவும் கவலைக்குரியதும் மிகவும் பாரதூரமானதுமான காரணியாக இருப்பது, அது தொடர்பில் ஜனாதிபதி முஸ்லிம் மக்கள் மீது வைத்திருக்கும் பற்றாகும். அவரின் தனிப்பட்ட சொத்திலன்றி அரசாங்கத்தின் அதாவது பொது மக்களின் செலவில் முஸ்லிம் மக்களை மக்கா அனுப்பினால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று அவர் நினைக்கின்றார்.

 

உண்மைதான். வாழ்நாளில் ஒரு தடவையாவது மக்கா செல்ல வேண்டுமென்பது முஸ்லிம் மக்களின் பெரும் எதிர்பார்ப்பாகும். அது சம்பந்தமாக அவர்களை ஊக்கப்படுத்துவது அவசியமாகும். என்றாலும் முஸ்லிம்களை அரசாங்கத்தின் செலவில் மக்கா அனுப்புவதற்கு நினைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த காலங்களில் இந்நாட்டு முஸ்லிம்களை கவனித்தது எவ்வாறு?

 

அண்மையில் இடம்பெற்ற ஒரு உதாரணமானது, 2014ல் அளுத்கமையில் இடம்பெற்ற கறுப்பு ஜூன் ஆகும். என்றாலும் அது முதன் முறையாக இடம்பெற்ற சம்பவமல்ல. செயற்பாட்டின் பிரதிபலனாகும். அந்தச் சம்பவமும் அதற்கு வழியமைத்துக் கொடுத்த அதற்கு முன் இடம்பெற்ற இனவாதம், மதவாதம் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றபோது இந்த அரசாங்கம் எந்த முகத்தை வைத்துக் கொண்டிருந்தது என்பதை யாவரும் அறிவர். அரசாங்கத்தின் திறந்த ஆசிர்வாதத்தையும் அனுசரணையையும் பெற்றுக் கொண்டு பௌத்த சமயத்திற்கும் புத்தசாசனத்திற்கும் அவமதிப்பைப் பெற்றுத் தரும் நோக்கில் நடந்து கொண்ட காவியுடை அணிந்த குழுவொன்று மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக பிரசித்தமாக இடம்பெற்ற வைரத்தை ஏற்படுத்தி குழப்ப நிலையை உண்டு பண்ணும்போது ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் உட்பட அரசாங்கத்தின் அதிகாரிகளும் காது கேட்காதவர்கள் போன்றும் கண் தெரியாதவர்களும் போன்றே இருந்தனர்.

 

நாட்டின் சட்டத்தை மதிக்காமல் ஆயிரக்கணக்காக அநியாயங்களை அவர்கள் செய்யும்போது அவர்களின் முன்னிலையில் வளைந்து கொடுக்கும் பொலிஸ் அதிகாரிகள் இருந்தார்களே தவிர, உண்மையாக நடவடிக்கை எடுத்த ஒருவரையும் நாம் காணாதது, அரசாங்கத்தின் ஆச்சரியத்தின் கட்டாயத்தால் சட்டத்தை மதித்து நடக்கும் நிறுவனங்களும் அவர்களிடம் சிக்கியிருந்தது தெளிவாக புரிந்தது. அளுத்கம சம்பவத்தை தேடிப்பார்த்து உரிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொமிஷன் ஒன்றை ஜனாதிபதி நியமித்திருக்கிறார் என்று அச்சந்தர்ப்பத்தில் ஊடகங்களில் பிரசுரமாகியிருந்தாலும் அந்த கொமிஷனும் அறிக்கையும் எங்கே என்பதை அறிந்தவர்கள் யாரும் கிடையாது.

 

இந்தச் சம்பவங்களின் அடிப்படையில் இலங்கையில் சிறு எண்ணிக்கையினராக இருக்கும் முஸ்லிம்களின் மனங்களில் ஏற்படுத்தியிருக்கும் பயம், மனிதாபிமானம், கௌரவப்படுத்தல் சம்பந்தமான பிரச்சினைகள் மனஉளைச்சல் மற்றும் எதிர்பார்ப்பு அற்ற தன்மை போன்றவற்றின் விரக்தி நிலையை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மையாகும். சமூகத்தில் சிறுபான்மையினர் என்பதன் ஊடாக ஏற்படும் சகலவிதமான வேறுபடுத்தி பார்க்கும் தன்மை, மனிதாபிமானம் போன்றவற்றை இல்லாமல் செய்வது, பயம் மற்றும் சந்தேகம் போன்றவற்றை மனதில் ஏற்படுத்துதல் போன்ற சகல சம்பவங்களையும் கடந்த காலங்களில் அவர்கள் அனுபவித்தார்கள். தற்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அந்த மோசமான அனுபவங்களுக்கு பங்களிப்புச் செய்தது அரசாங்கமாகும்.

 

தற்போது அரசாங்கத்தின் செலவில் மக்காவுக்கு அனுப்புவதற்கு நினைத்தாலும் தங்களை வேறுபடுத்திப் பார்த்தது, கவனித்தது தொடர்பாக முஸ்லிம்களின் மனங்களில் ஏற்பட்டிருக்கும் விரக்தியை இல்லாமல் செய்வது மிகவும் கஷ்டமான ஒரு காரியமாகும்.

Previous post ஞானசார தேரரும் முபாரக் மௌலவியும் யாருக்கு ஆதரவு என்று இதுவரை தீர்மானிக்கவே இல்லையாம்!
Next post ஜனாதிபதி முறையில் சிக்கல் ஆளும்கட்சிக்குள் குழப்பம்