புதுவருட அதிர்ச்சி !

2015ம் ஆண்டு நாளை பிறக்க இருக்கும் அதே வேள அரசியலிலும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

மகிந்தவின் பக்கம் மற்றும் மைத்திரியின் பக்கம் என அரசியல் விக்கெட்டுக்கள் அடுக்கடுக்காக வீழ்ந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் நாளை புது வருட தினத்தன்றும் அதிர்ச்சியூட்டும் விக்கெட்டுக்கள் விழ இருப்பதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

 

அரசுப்பக்கம் இருந்து மிக மிக மிக முக்கிய புள்ளியொன்று மைத்திரி பக்கம் இணையவுள்ளதாக தெரியவருகின்றது.

 

குறித்த அந்த முக்கிய புள்ளி தொடர்பிலும் ;அவரருது கட்சித் தாவல் தொடர்பிலும் மைத்திரி அணி மிகவும் கடுமையான முறையில் இரகசியம் பேணுவதாக தெரியவருகின்றது.

 

குறித் நபரின் கட்சி மாற்றம் மகிந்த அரசுக்கு புதிய வருட ‘சொக்காக’ அமையும் என மைத்திரி பக்கம் ;இணைந்து கொண்ட ஒரு முக்கிய புள்ளி எமது இணையத்திற்கு தெரித்தார்.

 

அதே வேளை நாளை புதுவருட தினத்தன்று மகிந்தவும் மைத்திர அணிக்கு புது வருட சொக் கொடுக்காமல் விடமாட்டார் என்றும் அந்த பிரமுகர் மேலும் தெரிவித்தார்.

Previous post குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை – ஹசன் அலி
Next post பூனைக்குட்டிகள் போல் எதிரணியில் உள்ளவர்கள் மீண்டும் ஜனாதிபதி மஹிந்தவைத் தேடி வருவார்கள் – ஜோதிடர் சந்திர சிறி