கிழக்கு முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம்!

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் ஸீரின்  பணிப்பின் பேரில்
இன்று காலை ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் செய்த
கிழக்கு முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ்.எல்.எம்.பளீல்  துறைமுகத்தின் தற்போதைய நிர்வாகமுகாமையாளர் .எம்.ஏ. கபீருடன் துறைமுகத்தின் தற்போதைய நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை மேற் கொண்டார்.

 

கடந்த 02 வருடங்களுக்கு மேலாக அடிப்படை வசதிகளோடு கட்டி
முடிக்கப்பட்டு இன்னும் செயற் படுத்தப்படாதிருக்கும் வர்த்தக
துறை முகப்பிரிவு தொடர்பாக எதிர் நோக்கும் பிரச்சினைகள்,
அப்பிரிவினை பயன் பாட்டிற்கு உட்படுத்துவதிலுள்ள நடை முறைப் பிரச்சினைகள் தொடர்பாகவும்
கேட்டறிந்து கொண்டார்.

 

தற்போதைய நடை முறை நிலைமைகளை விரிவாக அவதானித்து அறிந்து கொண்ட
இணைப்புச் செயலாளர்  பளீல் துறைமுகத்தை அதன் முழுக்
கொள்ளளவில் இயங்கவைப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தும்
அறிக்கை ஒன்றினை  கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீருக்கும்
தலைவர் அமைச்சருமான றவூப் ஹக்கீமிடமும் சமர்ப்பிக்கப்
போவதாக செயலாளர் உறுதியளித்தார்.

Previous post முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் எவ்வித உதவிகளையும் வழங்கவில்லை ;மக்கள் எதிர்ப்பு(video)
Next post டுபாயில் இலங்கை பெண் ஒருவருக்கு நீதிமன்றம் மூன்று வருட சிறை