20 ஆவது அரசியல் திருத்தம்; முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக பாதிப்பு – ஹாபிஸ் நசீர் அ

20 ஆவது அரசியல் திருத்தம் கொண்டுவரப்பட்டால் சிறுபான்மை இன மக்கள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் கூறினார். அவர் தெரிவித்ததாவது,
சிறுபான்மை மக்களுக்கு பெரிய பாதகத்தை உண்டாக்குகின்ற ஒரு அரசியல் திருத்த சட்டம் 20 ஆவது அரசியல் திருத்தம். முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது.
தமிழ் மக்கள் அவர்களுடைய பிரதிநிதித்துவங்களை இழக்கின்ற வாய்ப்புகள் இருக்கின்றன. மலையகத்தில் உள்ள தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவங்கள் கேள்விக்குறியாகக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்றார்.
Previous post துபாயில் காயமடையும் ஊழியர்களுக்கு சிகிச்சை காலமான 6 மாத சம்பளம்
Next post 19 ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டமையினால், கிடைக்கும் நன்மைகள்..!