மாட்டிறைச்சிக் கடைகளுக்கு 2014 ம் ஆண்டிக்கு நிபந்தனையின் அடிப்படையில் அனுமதிப் பத்திரம்
-மொஹொமட் ஆஸிக்-
ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை பிரிவிற்குள் இயங்கும் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு 2014 ம் ஆண்டிக்கு நிபந்தனையின் அடிப்படையில் அனுமதிப் பத்திரம் வழங்க பிரதேச சபையில் இன்று 2014 01 21 இடம் பெற்ற மாதாந்த பொதுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கடந்த மாத பொதுக் கூட்டதின் போது ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை பிரிவிற்குள் இயங்கும் மாட்டிரைச்சி கடைகளுக்கு 2014 ம் ஆண்டிக்கான அனுமதிப் பத்திரம் வழங்கக் கூடாது என ஒரு பிரேரனை நிரைவேற்றப்பட்டிருந்தது.
இன்று 21 இடம் பெற்ற கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கமருஸ் ஸமாண் கறுத்து தெரிவிக்கையில் ஹாரிஸ்பத்துவ பிரதேச சபைப் பிரிவில் சுமார் 15000 ம் முஸ்லிம்கள் வாழ்வதாகவும் அவர்கள் செரிந்து வாழும் பிரதேசங்களில் தற்போது இயங்கி வரும் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு 2014 ம் ஆண்டிக்காக அனுமதிப் பத்திரம் வழங்குமாரும் வேண்டிக் கொண்டார்.
தலைவர் ஆனந்த ஜயவிலால் அவர்களின் வேண்டுகோலுக்கு இனங்க இது சம்பந்தமாக ஆராய்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் நிபந்தனையின் அடிப்படையில் 2014 ம் ஆண்டிக்காக இரைச்சிக் கடகைளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக விதித்த நிபந்தனை, ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை எல்லைக்குள் மாடுகள் அறுப்பது தடை செய்யப்பட்டுள்ளதால் சட்ட விரோதமாக எவரேனும் மாடுகள் அறுத்தாலோ அவ்வாரு அறுக்கப்பட்ட மாடுகளின் இறைச்சியை கடைகளில் விற்பனை செய்தாலோ இக் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் என்பதாகும்.

