சாய்ந்தமருதின் நிவாரணம் ஜம்மியத்துல் உலமாவின் அனர்த்த நிலையத்திற்கு அனுப்பி வைப்பு!

 

வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பொருட்டு சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் சேகரிக்கப்பட்ட நிதி மற்றும் நிவாரணப் பொருட்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைமையிலான அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு நிலையத்தில் ஒப்படைப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றைக் கொண்டு செல்லும் குழுவினரை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இரவு சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் முன்றலில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் முன்னிலையில் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்றது. இதன்போது சேகரிக்கப்பட்ட ஒரு லொறி அடங்கிய சுமார் 30 இலட்சம் பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், புதிய ஆடைகள் மற்றும் சுமார் 15 இலட்சம் ரூபா பணத்திற்கான காசோலை என்பன குழுவினரிடம் கையளிக்கப்பட்டன.

சாய்ந்தமருது ஜம்மியத்துல் உலமா தலைவரும் பள்ளிவாசல் உப தலைவருமான மௌலவி யூ.எல்.எம்.காசிம் தலைமையிலான பயணக் குழுவில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.தில்சாத், மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் எஸ்.எம்.கலீல், வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் எம்.எம்.சத்தார் உட்பட மரைக்காயர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர்.

l

d d.jpg2

Previous post இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 13 வது எந்திரனியல் பட்டறை (Photo)
Next post புல்மோட்டைப் பிரதேச மக்களுக்கு ஏற்படும் அநீதி இழைப்பை ஏற்க முடியாது – அன்வர்