அமைச்சர் அதாவுல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்ட முப்பெரு விழா

-சலீம் ரமீஸ்-

அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தின் ‘முளையில் தெரிந்த விளையும் பயிர்கள் அறிமுகமும் உரமூட்டிய ஆசிரியர்கள் பாராட்டு நிழ்வும்’ எம்.எச்.எம்.ஜஃபர் தலைமையில் இடம் பெற்றது.

 

இந்த வைபவத்தில் ஆரம்ப வகுப்பு மாணவர்கள் வரவேற்கப்பட்டு, ஏடு தொடக்கு நிகழ்வும், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் தோற்றிய மாணவர்கள், கற்பித்த ஆசிரியர், மற்றும் அதிபர் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது.

 

முதலாம் வகுப்பு மாணவர்கள் 67 பேருக்கும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய 14 மாணவர்களுக்கும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் தனிப்பட்ட நிதி மூலமாக வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டதுடன் கற்பித்த ஆசிரியர் ஒ.எல்.எம்.றிஸ்வான் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 

இதே வைபவத்தில் அல்-அர்ஹம் வித்தியாலயத்தின் ஆசிரியர் ஏ.கே.அஹமட் ஸமூர் எழுத்துருவாக்கிய ‘துரித கணிதம்’ பாடநூல் வெளியீட்டு விழாவும் பாடசாலை அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் இடம்பெற்றது.

 

அத்துடன் அட்டாளைச்சேனை கால்நடை வைத்திய அலுவலகத்தினால் மஹிந்த சிந்தனையின் கீழ் தூய பசும் பால் வழங்கும் திட்டத்தின் கீழ் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.நதீர் தலைமையில் பசும் பால் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

 

இந்த வைபவத்தில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி ,மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அமைச்சருடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர், அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எல்.எம்.காசீம், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி, அல்-அர்ஹம் வித்தியாலய அதிபர் எம்.ஏ.அன்ஸார், பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ், விஸ்டம் அகடமி உரிமையாளரும், அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஏ.எம்.இர்பான் உட்பட கல்விமான்கள், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

 

 

 

Previous post மாமா அஸ்மியின் நெருங்கிய சகா பதூர் கைது
Next post இடம் பெயர்ந்து வாழும் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்கு எந்த ஒரு தரப்பினராவும் தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை