றிசாட் பதியுதீனினால் யாழ் மாவட்ட பள்ளிவாசல்களிற்கு குர்ஆன் பிரதிகள் வழங்கிவைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் இலங்கை முஸ்லிம்களின் தேசிய தலைவருமான அமைச்சர் றிசாத் பதியுத்தீனால் யாழ் மாவட்ட முஸ்லீம் மக்களுக்கு ரமழான் மாதத்தை முன்னிட்டு பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஊடாக அல் குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) இரவு 8 மணியளவில் யாழ் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் வைத்து அமைச்சரின் பிரதிநிதிகளினால் கையளிக்கப்பட்டது.

இதில் சுமார் 16 பள்ளிவாசல்களிற்கு மகல்லா வாசிகளாக உள்ள அனைத்து மக்களிற்கும் தலா ஒரு குர்ஆன் வீதம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது அமைச்சரின் இணைப்பு செயலாளர் எம்.அன்வர் அமைச்சரின் மக்கள் தொடர்புகள் ஒருங்கிணைப்பாளர் முஜாஹீத் யாழ் மாவட்டத்திற்கான அமைச்சரின் மீள்குடியேற்ற நடவடிக்கைக்கான இணைப்பாளர் பி.எஸ்.எம் சுபியான் மௌலவி யாழ் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீன் ஹாஜியார் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் இணைப்பாளர் சீலன் கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினர்களான ஆர்.கே.சுவர்ஹஹான் கே.எம்.நிலாம் எம்.ரொக்கீஸ் உட்படபலரும் கலந்துகொண்டனர்.

o o.jpg2.jpg3 o.jpg2.jpg3.jpg4 

Previous post கல்குடா இளைஞர் காங்கிரஸ் ஏற்பாட்டில் இறால் ஓடையில் இப்தார் நிகழ்வு
Next post கல்முனை ஹூதா திடலில் நோன்புப் பெருநாள் தொழுகை.