தேர்தல் காலங்களில் எப்படி நடப்பது? – ஜம்இய்யத்துல் உலமா அறிவுரை!
எதிர்வரும் 21 ஆம் திகதி நடை பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பின்வரும் வழிகாட்டல்களைக் கவனத்திற்கொண்டு செயலாற்றுமாறு இலங்கை முஸ்லிம்களிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோளொன்றை விடுத்து ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த...
தேசிய ஷுரா சபை சஜித் பிரேமதாசவுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பு!
தேசிய ஷுரா சபை பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (12) கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமையகத்தில் நடைபெற்றது. தேசிய மட்டத்தில்...
“சிங்கள மொழியைப் பாதுகாப்பது போல் தமிழ் மொழியையும் நான் பாதுகாப்பேன்” – நாமல்!
“பௌத்த கலாசாரத்தால் உருவாக்கப்பட்ட இந்த நாடு ஏனைய இன மக்களின் கலாசாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் என நம்புகின்றேன். இருந்தபோதும் தாய்மொழியை மறக்கும் காலம் வந்துவிட்டது. எனவே, நான் எனது சிங்கள மொழியைப் பாதுகாப்பது போல்...
‘இலவசக் கல்வியை முழுமையாக பாதுகாப்பதோடு மாற்றுக் கல்விக்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்த வேண்டும்’ – சஜித்!
தொழில் ரீதியான போதனையாளர்களுடைய செயற்பாடுகள் தற்போதைய கல்வி முறையோடு பொருந்த வேண்டும். இலவச கல்விக்காக நாம் முழுமையாக செயல்படுவோம். இலவச கல்வியை அறிமுகப்படுத்திய சந்தர்ப்பத்தில் சமூகத்தில் உயர் வர்க்கத்தில் இருந்த சிலர் அதற்கு எதிர்ப்பு...
“அனுரவின் அலங்கார வார்த்தைகள் நமக்கு விமோசனம் தராது” – விசேட நேர்காணலில் ரிஷாட்!
அனுரவுக்கு ஆதரவளிப்பவர்கள் கோட்டாவின் யுகத்தை மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் வெறுமனே அலங்கார பேச்சுக்களுக்கும் இனிப்பான வார்த்தைகளுக்கும் மயங்கிவிட வேண்டாம் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்...
தேர்தல் பிரசாரங்களுக்கு குழந்தைகளை பயன்படுத்த வேண்டாம் – தேர்தல் கண்காணிப்பு அமைப்பு விடுத்துள்ள அறிவிப்பு!
தேர்தல் பிரசாரங்களுக்கு குழந்தைகளை பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன. தேர்தல் பிரசாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்திய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக “சுரகிமு தருவென்“...
Video – “பொதுத்தேர்தலில் 10 எம்.பிக்களைப் பெறுவோம்” – மன்னாரில் ரிஷாட்!
மக்களின் ஆணையை மீறி, கட்சியின் கட்டுக்கோப்பை உடைத்துக்கொண்டு, வேறு கட்சிகளில் இணைந்தோரால் எந்தப் பாதிப்பும் ஏற்படாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரில் (10) நடைப்பெற்ற...
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இரத்து – சுமந்திரன்!
“ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில், அவருடன் நான் நேரில் கலந்துரையாடி விசேட குழுவுக்கு அறிவிப்பேன். எனவே, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய...
சீதா அரம்பேபொலவுக்கு புதிய அமைச்சு!
மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொலவை நியமித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இந்த நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்டது.
‘சோசலிசம் குறித்து கதைக்கின்ற அநுர ரணிலோடு பெரிய டீல் செய்திருக்கிறார்’ – சஜித்!
ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை பங்கு போட்டிருக்கின்றார்களா என்றும் சந்தேகம்! தற்போதைய ஜனாதிபதி பொருளாதாரத்தை சுருக்கி மக்களின் மீது சுமையை அதிகரித்து மக்களை அழுத்தத்திற்கு உட்படுத்துகின்ற கொள்கை திட்டமொன்றை பின்பற்றுகின்றார். அத்தோடு தன்னை தோல்வியடையச்...
“ரிஷாட் பதியுதீனின் தலைமையே வடபுல மக்களுக்கு வழிகாட்டும்; குரங்குகளைப்போல தாவுவோருக்கு தலைமை தயவுகாட்டக் கூடாது”
மன்னார் மாவட்ட முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்! உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் எங்களை விட்டுச் சென்றாலும் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனுடன் உறுதியாகச் செயற்பட்டு, சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யவுள்ளதாக அகில இலங்கை...
“தேசியப்பட்டியலுக்காக முஸ்லிம்களின் தேசப்பற்றை மலினப்படுத்த சிலர் சதி” – திஹாரியில் ரிஷாட்!
முஸ்லிம் இளைஞர்களை அரசியல் பாதையில் சரியாக வழிநடத்தும் பொறுப்பு உலமாக்களுக்கு உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, புதன்கிழமை (04) திஹாரியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, "உலமா என்ற போர்வையில், சஹ்ரான் காடைக்குழு செய்த இழி செயலால், முஸ்லிம்கள் அனுபவித்தவற்றை எண்ணிப்பாருங்கள். இளைஞர்களை தவறான உணர்ச்சிப்பாதைக்குள் ஈர்க்க முனையும் அரசியல் சித்தாந்தம் முழு நாட்டுக்குமே ஆபத்தானது. இவ்வாறு இருக்கையில், முஸ்லிம் தலைமைகளை வீணாக விமர்சிக்கும் ஒரு சில உலமாக்கள் விடயத்திலும் எச்சரிக்கையாகச் செயற்பட வேண்டியுள்ளது. ஆயுதக் கவர்ச்சியில் அகப்பட்டு, முஸ்லிம் இளைஞர்கள் சீரழிவதையும் சமூகம் நாசமடைவதையும் தவிர்ப்பதற்காகவே, பெருந்தலைவர் அஷ்ரப் தனித்துவக் கட்சியை ஆரம்பித்தார். சிங்கள இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திலோ அல்லது தமிழ் இளைஞர்களின் விடுதலைப் போராட்டத்திலோ முஸ்லிம் இளைஞர்கள் பங்கேற்கவில்லை. இதனால், நமது சமூகம் பாதுகாக்கப்பட்டது. ஆனால், தன்னைத் தானே உலமாவென சுயமகுடம் சூட்டிய சஹ்ரானின் செயற்பாடு, முழு முஸ்லிம்களையுமே சீரழித்தது. ஈஸ்டர் தாக்குதலைப் பயன்படுத்தி, முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் இஸ்லாத்தை அடிப்படைவாத மார்க்கமாகவும் சித்தரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கொடுங்கோலன் கோட்டாபய ராஜபக்ஷவின் கூலிப்படைகள் எடுத்த இந்த முயற்சிகளை அடியோடு எதிர்த்தோம். இதனால், என்னைச் சிறையில் அடைத்தனர். எனது குடும்பத்தையே பழிவாங்கி வெஞ்சம் தீர்த்தனர். கொரொனா ஜனாஸாக்களை எரித்தபோதும் நாங்களே கொதித்தெழுந்தோம். அரபு நாடுகளோ, முஸ்லிம் ஆட்சியாளர்களோ எதையும் பேசவில்லை. அமைச்சர் அலிசப்ரியோ, தொலைபேசியை "ஓப்f" செய்துவிட்டு ஒளித்துவிட்டார். வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் நாங்களே மீள்குடியேற்றினோம். கண்டி, திகனை, அழுத்கமை மற்றும் அம்பாறை பற்றி எரிந்த வேளையில் களத்தில் நின்று காரியமாற்றியதுடன், நெருப்பை அணைத்ததும் நாங்களே! இவற்றை மறைத்துவிட்டு, நாங்கள் எதையும் செய்யவில்லை எனச் சிலர் கூறுகின்றனர். தேசியப்பட்டியலுக்காக முஸ்லிம்களின் தேசப்பற்றை மலினப்படுத்துவதை நிறுத்துங்கள். சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் சகல சமூகங்களுக்கும் நன்மைகிட்டும். ரவூப் ஹக்கீம், மரிக்கார், முஜிபுர்ரஹ்மான், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், கபீர்ஹாஸிம், மனோகணேசன், ராதாகிருஷ்ணன், திகாம்பரம் மற்றும் சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட சகலரும் எம்மிடமே உள்ளனர்" என்று கூறினார்.
புதிய மின் கட்டண விபரத்தை வௌியிட்ட அமைச்சர்!
ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன்படி, வீட்டு பாவனை நுகர்வோருக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும்...
வெள்ளத்தின் தாக்கம் தொடரும் – நீர்ப்பாசன திணைக்களம்!
வெள்ளம் படிப்படியாக குறைவடைந்தாலும் சில இடங்களில் வெள்ளத்தின் தாக்கம் தொடரும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம்...
ரோயல் பார்க் கொலைச் சம்பவம் – மைத்திரி வழங்கிய பொது மன்னிப்பு செல்லுபடியற்றது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
இராஜகிரிய, ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஷமந்த ஜயமஹா என்பவருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கி, விடுதலை செய்த தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானது என...
’ஹிஜாப்பால் பெறுபேறு இரத்தாகாது’ – முஜிபுர் ரஹ்மான் கேள்விக்கு சுசில் பிரேமஜயந்த பதில்!
ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றியதால் பெறுபேறு இரத்து செய்யப்படமாட்டாது என தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றார். காதுகளை மறைத்த வண்ணம் ஹிஜாப் அணிந்திருக்கும் போது...
பர்தா அணிந்தமைக்காக திட்டமிட்டு பழிவாங்கப்பட்ட திருமலை ஸாஹிரா மாணவிகள்- ரிஷாட் ஆவேசம்!
திருகோணமலை சாஹிரா கல்லுாரி மாணவிகளின் உயர்தரப் பெறுபேறுகளை உடனடியாக வெளியிடுமாறு ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய தினம் (04) நாடாளுமன்றில்...
சம்மாந்துறையில் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளவரின் நியமனத்தை இரத்துச் செய்து ஏற்கனவே கடமையாற்றிக் கொண்டிருக்கின்றவரை தொடர்ந்தும் பணியாற்றும் வகையில் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியும் சம்மாந்துறை வலயக்...
அவசர அமைச்சரவை பத்திரம் வருகிறது!
மோசமான காலநிலையால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை முப்படையினரின் உதவியுடன், அரசாங்கத்தின் செலவில் புதிதாக நிர்மாணிப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குமான பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அவசர அமைச்சரவைப் பத்திரமொன்று இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில்...
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் மாகாண மட்டத்தில் முதலிடம் – ரிஷாட் வாழ்த்து!
மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம், கல்வி வளர்ச்சியில் அடைவு மட்டத்தை எட்டி தொடர்ந்தும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துவதாக அகில...
திருமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம்; திட்டமிட்ட சதி என்கிறார் அப்துல்லா மஹ்ரூப் – ஜனாதிபதி, கல்வி ரிஷாட் பேச்சு!
திருமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம்; திட்டமிட்ட சதி என்கிறார் அப்துல்லா மஹ்ரூப் - ஜனாதிபதி, கல்வி அமைச்சருடன் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பேச்சு! அண்மையில் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட...
உயர்த்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் மாகண மட்டத்தில் முதலிடம் – அமீர் அலி வாழ்த்து!
பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட க.பொ.த (உ/த) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் 75.5% மான சித்தி மட்டத்தைப் பெற்று மாகண மட்டத்தில் முதலாவது...
மக்கள் காங்கிரஸுடன் இணைந்துகொண்ட ரிஸ்லி முஸ்தபா!
முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபாவின் புதல்வர் றிஸ்லி முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளும் நிகழ்வு (31) சாய்ந்தமருது பாபா றோயலி மண்டபத்தில் சிரேஷ்ட...
நெலும் மாவத்தையில் பதற்றம்!
பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள நெலும் மாவத்தையை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சற்று முன்னர் கடக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பல சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்திற்கு அருகாமையில் இருந்து நெலும் மாவத்தை...
“ஜனாதிபதி பதவிக்காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவும்”
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, செவ்வாய்க்கிழமை (28) யோசனை தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக்...
