மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மாணவத் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு

-பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மாணவத் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் மற்றும் அடையாள அட்டை வழங்கிய நிகழ்வு அண்மையில் (13-02-2014) பாடசாலை திறந்த வெளியரங்கில் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, கலந்து கொண்டார்.

 

 

விஷேட அதிதிகளாகக் நாவிதன்வெளி பிதேச செயலக கணக்காளர் வை.ஹபீபுள்ளாஹ், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹ்பர். ஆகியோரும் கலந்து கொண்டனர்; சிரேஸ்ட மாணவத் தலைவர்களான செல்வன் ஏ.ஜி.சனீஜ். செல்வி ஐ.ரி.அப்ரோஸ் ஆகியோருடன் 46 மாணவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நியமனக்கடிதம் என்பன பிரதம அதிதியால் வழங்கப்பட்டது.

 

 

இங்கு பிரதி அதிபர் ஏ.எம்.அன்சார். பெண்கள் பிரிவு அதிபர் எம்.முஸம்மில், உதவி அதிபர்களான எம்.எம்.எம்.நியாஸ். ஏ.ஆர்.எம்.உவைஸ், மற்றும் பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

 

p1 p2 p3 p4 p5 p6 p7 p8 p9

Previous post மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழக த்தின் முயற்சியினால் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உதவி
Next post கப்பலைக் காணோம்